Wednesday, December 29, 2010

தி.மு.க. தோற்க வேண்டும்! ஏன்?நன்றி: http://ujiladevi.blogspot.com
  டெல்லி செங்கோட்டையிலிருந்து கன்னியாகுமரி வட்டகோட்டை வரை தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சி அலங்கோலத்தைப் பற்றி பேசாதவர்கள் மிக குறைவு, வடக்கில் இருந்து வந்து தமிழகத்தை சுரண்டுகிறார்கள் என்று வீதிதோறும் மேடை போட்டு பாட்டுபாடி தீர்த்தவர்கள், இன்று வடக்கே சென்று ஆட்சி பீடத்தில் ஒட்டிக்கொண்டு ஒட்டுமொத்த தேசத்தையே உண்டுயில்லை என்று ஆக்கி கொண்டிருப்பதாக நாடு முழுவதும் பேசப்படுகிறது தி.மு.காவின் சுரண்டலை தாங்க முடியாமல் திரு. ராகுல்காந்தி கூட கொதித்து போயிருப்பதாக கேள்வி, இப்படி எல்லாதரப்பிலும் கரித்து கொட்டும் அளவிற்கு இவர்கள் செய்த தவறுகள் தான் என்ன? கலைஞர் அரசால் ஒரு ரூபாய்க்கு அரசி உட்பட இரண்டு ஏக்கர் நிலம், இலவசதொலைக்காட்சி பெட்டி, மருத்துவ காப்பிடு திட்டம் என ஏகப்பட்ட நல திட்டங்களை செய்து வருகிறார்களே இவர்களை ஏன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்? என சில விவரம் புரியாதவர்கள் கேட்கிறார்கள். அப்படி கேட்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவு என்றாலும் விளக்கம் சொல்ல வேண்டியது நமது கடமை.


       ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று மிக பிரமாதமாக விளம்பரபடுத்தபடுகிறது அந்த விளம்பரத்தை மேலோட்டமாக கேட்டோம் என்றால் தமிழ்நாட்டில் பசி கொடுமை என்பதே கலைஞர் ஆட்சியில் இல்லாது போய்விட்டது என்று தோன்றும். ஆற அமர உட்கார்ந்து அரசியை தவிர மற்ற பொருட்களின் விலை நிலவரத்தை ஆராய்ந்து பார்த்தால் வெறும் சோற்றை மட்டுமே சாப்பிட பழகி கொண்டவர்களால் தான் தமிழ்நாட்டில் வாழ முடியும் என்பது தெரியும். பருப்பு விலை காய்கறிகளின் விலை, மசாலா பொருட்களின் விலை, இன்னும் சமையலுக்கு தேவையான மண்ணெய், எரிவாயு, விறகு என்று எல்லாவற்றையும் கணக்கு போட்டு பார்த்தால் ஒரு சிறிய குடும்பத்தை பட்டினி இல்லாமல் நடத்துவதற்கு தினசரி இருநூறு ரூபாயாவது வேண்டும். அடிப்படை தேவைகளுக்கே மாதம் ஆறாயிர ரூபாய் வேண்டும் எனும்போது தண்ணீர் வரி, மின்சார வரி, மருத்துவ செலவு, மற்றும் இதர செலவுகளுக்கு மக்கள் கண்கள் பிதுங்கி விடுகிறார்கள்.


    அதற்காக அரசாங்கம் ஒவ்வொரு குடி மகனுக்கும் மாதம் பத்தாயிரம் உதவி தொகையா தர முடியும்? என்று சிலர் கேட்கலாம் தமிழகத்தில் இருக்கின்ற எந்த மக்களும் உதவி தொகை எதிர்பார்க்கவில்லை. பொருட்களின் விலைவாசி குறைந்தால் தங்களது வருவாய்க்குள் செட்டும் சிக்கனமாக குடும்பத்தை நடத்தி கொள்ளலாம் என்று தான் எதிர்பார்க்கிறார்கள். முன்பெல்லாம் கடைதெருவிற்கு போனால் சட்டை பையில் பணத்தை எடுத்து போயி கைப்பையில் பொருள் வாங்கிவரலாம். இப்போதோ கைப்பையில் பணம் எடுத்து போனாலும் கூட சட்டை பை நிறைய பொருள் கிடைப்பதில்லை.

     விலைவாசி நிலவரம் இப்படியென்றால் மின்சாரத்தின் கதையோ மிக மோசமாக இருக்கிறது. பெரிய தொழிற்சாலை முதல் குழந்தைகள் படிப்பது வரைக்கும் மின்சாரம் இன்று அத்தியாவசிய தேவையாகிவிட்டது. சுமார் ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லையென்றால் திருப்பூர், கோவை, சிவகாசி போன்ற தொழில் நகரங்களில் உற்பத்தி இழப்பு என்பது பல கோடி ரூபாயை தாண்டிவிடும்.

     இன்று தமிழகம் முழுவதிலுமே பலமணி நேரங்கள் மின்சாரம் இருப்பதில்லை. பலசிறிய தொழிற்சாலைகள் முற்றிலுமாக இயங்க முடியாத நிலைக்கு போய்விட்டன. இதனால் பல தொழிலாளர் குடும்பங்கள் வீதி வந்துவிட கூடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.    நமது தமிழக அரசோ மின்சார உற்பத்தியை சீர்படுத்துவதற்கு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக தெரியவில்லை இரண்டாயிரத்து ஒன்பதில் கூட அதற்கான நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரளவு பிரச்சனையை சமாளித்து இருக்கலாம். அரசின் மெத்தன போக்கால் விவசாயம், தொழில்துறை, வீடுகள், மருத்துவமனைகள் கூட இருள் அடைந்து வருகிறது.

    இந்த நிலையில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 600 யுனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்டுத்துபவர்களுக்கு யுனிட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் ஏற்றியிருப்பது கடும் வேதனைக்குரியது, இன்றைய நிலையில் 300 யுனிட்டுகளுக்கு மேல் உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம், அதுவும் தற்போது பொருத்தப்பட்டிருக்கும் மின்சார கணக்கீடு டிஜிட்டல் மீட்டர்கள், இண்டிகேட்டர் எரிந்தால் கூட மரவட்டை மாதிரி நகர்ந்து கொண்டேயிருக்கிறது. இப்போது எல்லாம் சாதாரணமாக ஒரு குழல்விளக்கு எரிந்தால் கூட முன்னூறு ரூபாய்க்கு மேல் தான் மின்சாரகட்டணம் வருகிறது.


   தமிழகத்தின் பல ஊர்களில் குடி தண்ணீர் விநியோகம் என்பதே சுத்தமாக கிடையாது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் கார்பேரஷன் குழாயில் குடிதண்ணீர் வந்தே வருட கணக்காகிறது. தர்மபுரி, திருப்பூர், நான்குனேறி, ராதாபுரம், மதுரையின் சில பகுதிகளில் குடிதண்ணீருக்காக ஒரு குடும்பம் மாதம் முந்நூறு ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

  நிலத்தடி நீரை சரியான முறையில் பயன்படுத்தினாலே தமிழகத்தில் குடீநீர் பிரச்சனையே ஏற்படாது. ஆனால் நிலத்தடி நீர் சுண்டி போவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனை கெட்ட காரியங்களையும் ஆளும் தரப்பு செய்து கொண்டியிருக்கு, 


   பல நகராட்சிகள், பேரூராட்சிகளில் தெருவிளக்கை கூட பராமரிக்க அக்கறையில்லை. அரசாங்க மருத்துவமனைகளில் குறிப்பாக தலூக்கா தலைநகரங்களிலுள்ள மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துக்களே இருப்பில் இருப்பது இல்லை.

     கலைஞர் மருத்துவ காப்பிடு திட்டம் மிகபெரும் சேவைதிட்டமாக அரசாங்கத்தால் விளம்பரபடுத்தப்படுகிறது. உண்மையில் அந்த திட்டத்தால் சில ஏழைகள் பயன்பட்டாலும் கூட, பெருமளவு பயனையும், இலாபத்தையும் அனுபவிப்பது ஆளும் கட்சிகாரர்களுக்கு வேண்டப்பட்ட தனியார் மருத்துவ மனைகளே ஆகும்.

     அரசாங்கத்திலிருந்து நோயாளிக்கு ஒரு லட்சரூபாய் வரை சலுகை வழங்குவதாக கூறப்பட்டாலும் சிகிச்சைக்கு முன்பும், பின்பும் ஏரளமான கட்டண தொகைகளை மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளிடமிருந்து கரந்து விடுகிறது. சில குறிப்பிட்ட நோய்களுக்கு தான் கிசிக்கை என்று இருக்கும். போது நோயாளிகளுக்கு அது சம்பந்தமான விவரங்கள் தெரியாத போது மக்களின் அறியாமையை பல மருத்துவ மனைகள் சுயலாபத்தோடு பயன்படுத்துகின்றனர். ஆளும் தரப்புக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு சில மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமலே காப்பிட்டு நிறுவனத்திடமிருந்து பணம் பெற்று கொள்ளப்படுகிறது. இது மருத்துவர்களால் பேப்பர் கேஸ் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. நோயாளிக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்ட பிறகு சில செயற்கை கோணங்களில் புகைப்படம் எடுக்கப்பட்டு ஆவணமாக்கப்படுவதாகவும் கேள்வி.    சமச்சீர் கல்விமுறையை கொண்டு வந்துவிட்டதாக அரசாங்கம் பெருமையடித்து கொள்கிறது. உண்மையில் இந்த கல்விமுறை பாடப்புத்தகங்களில் மட்டுமே இருக்கிறது. நடைமுறையோ, மாணவர்களும், பெற்றோர்களும் திணரும் வண்ணமே உள்ளது.

     தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருமே தங்களுக்கு என்று தனிதனி கல்லூரிகளை கட்டி வசூல் வேட்டையில் மிக தீவிரமாக இருக்கும் போது மக்களுக்கு பயன்படும் வண்ணம் கட்டண விகிதங்களை அரசாங்கத்தால் எப்படி தீர்மானிக்க முடியும்?

     கல்வியை வியாபார பொருளாக ஆக்க வேண்டும் என்பதற்காகவே இந்தியை எதிர்த்தவர்கள், ஆங்கிலத்தை வரவேற்று தமிழை அழித்தவர்கள் கல்விக்காக எப்படி சேவை செய்வார்கள். 


       சமுதாயத்தில் நடைமுறை தலைமுறையினரை தமிழ் பண்பாட்டை அறிய முடியாத வண்ணம் இன்று நாடு ஆகிவிட்டது. தமிழக்காக ஒடும் ஏயிலை இடைமறித்து தண்டவாளத்தில் தலைவைத்து, பாளையங்கோட்டை சிறையில் பாம்பும், தேளும் நடுவில் கடுஞ்சிறை அனுபவித்தவர் ஆட்சியில் தமிழ் பண்பாடு காற்றோடு போனதோ இல்லையோ பணக்கார தமிழன் தான் படிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

       தி.மு.க. அரசு சொன்னதைதான் செய்யும், செய்ததை தான் சொல்லும் என்று நமது முதல்வர் அவர்கள் அழகான கவிதை மொழியில் பேசி ஐம்பது லட்சம் ஏக்கர் நிலத்தை நிலமில்லாத விவசாயிகளுக்கு தலா இரண்டு ஏக்கராக பிரித்து தரப்போவதாக வாக்குறுதி வழங்கி ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்கள், 


    ஆட்சிக்காலமும் இன்னும் சில மாதங்களில் முடிய போகிறது. இதுவரை எத்தனை பேர்கள் நிலத்தை பெற்றார்கள் என்று தெரியவில்லை. இது சம்பந்தமாக முதல்வரிடம் கேட்டால் ஐம்பது லட்ச ஏக்கர் நிலமில்லை, இருந்தால் காட்டுகள் பிரித்து தருகிறோம் என்கிறார்.

      இதை தான் ஆரம்பத்தில் வை. கோபால்சாமி, விஜயகாந்த் போன்றவர்கள் மேடைகளில் கேட்டபோது ஏழைகள் நிலம் பெறுவது பிடிக்காதவர்கள் என்று எரிச்சல்பட்டார் முதல்வர், இன்று அவர் கூறுகிறபடியே பன்னாட்டு நிறுவனங்களிடம் குவிந்து கிடக்கும் பல்லாயிர கணக்கான ஏக்கர் நிலங்களையாவது பிரித்து கொடுங்கள் என்று ஏழைகள் கேட்டால் காவல் துறையை ஏவிவிட்டு தடியடி நடத்தி தனது நிஜமான அரக்க தனத்தை வெளிகாட்டுகிறார்.     பன்னாட்டு நிறுவனங்கள் வைத்துள்ள நிலங்களை கை வைத்து புதிய பிரச்சனைகளை கூட கிளப்ப வேண்டாம். அரசுக்கு சொந்தமான ஏராளமான நிலங்களை ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகளை சார்ந்த திமிங்கலங்கள் பல காலமாக அபகரித்து அனுபவித்து வருகிறார்கள் அதை கையகப்படுத்தி மக்களுக்கு கொடுத்தாலே ஏராளமான பேர் பயனடைவார்கள்.

    தமிழக அரசே கூட திருவள்ளூர் மாட்டம் காவேரி ராஜபுரத்தில் 199 ஏக்கர் நிலத்தையும், பல்லவாடத்தில் 800 ஏக்கர் நிலத்தையும், திண்டுக்கல் மாவட்டம் பெரியம்மா பட்டியில் 5000 ஏக்கர் நிலத்தையும் கைவசம் வைத்துள்ளது.

        கையளவு இடமிருந்தால் கூட கண்ணீர் விடும் ஏழைக்கு தானமாக கொடுப்பேன் என்று வசனம் பேசிய முதல்வர் இந்த நிலங்களையெல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்ய போகிறாரோ தெரியவில்லை. ஒரு வேளை ஸ்டாலின் , அழகிரி, கனிமொழி தயாநிதிமாறன் போன்றோருக்கு பட்டாபோட்டு கொடுக்க போகிறாரோ என்னவோ? நிலைமை இப்படியிருக்க தி.மு.க அரசு செய்யும் பல நல்திட்டங்கள் அரசுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி கொடுக்கிறது என்று எதிர்கட்சிகள் பொறாமைபடுவதாக ஆளும் தரப்பு வாய்வலிக்க புலம்புகிறது.     தற்போதைய தமிழக அரசின் இலவச திட்டங்கள் எந்த கோணத்தில் மக்களால் பார்க்கப்படுகிறது, விமர்சனம் செய்யப்படுகிறது என்பதை ஆராய்ந்தால் மக்களிடத்தில் கூட சற்று விழிப்புணர்வு ஏற்பட்டுயிருக்கிறது என்று சொல்ல வேண்டும். இலவச அடுப்பு கொடுத்தார்கள் ஏரிவாயு சிலிண்டர் விலை பலமடங்கு ஏறிவிட்டதனால் அடுப்பு துருபிடித்து கிடக்கிறது.

   இலவச வண்ண தொலைகாட்சி பெட்டி தந்தார்கள். ஒரு நாள் ஒடியது மறுநாளில் வெறும் புள்ளி மட்டும் தான் தெரிந்தது. ஒடாத டி.வி யை மூலையில் போடுவதா அல்லது வெங்காயத்திற்கோ மரவள்ளி கிழங்கிற்கோ, காயலான் கடையில் போடுவதா?

    அடுத்ததாக இலவச நீர் மோட்டார் தரப்போவதாக தலைவர் அறிவித்து இருக்கிறார். அதை வாங்கி எந்த பழைய இரும்பு கடையில் போடுவது என்று மக்கள் பேசி கொள்கிறார்கள்.

      இதுமட்டுமல்ல இந்த இலவச திட்டங்களை எல்லாம் அறிவிப்பதை விட்டுவிட்டு நிலப்பதிவு அலுவலகம், வருவாய் துறை அலுவலகம், காவல் துறை போன்வற்றில் ஊழல் நடக்காமல் சாமானியனும் நிவாரணம் பெற வழி செய்தாலே கலைஞரை கை எடுத்து கும்மிடலாம் என்றும் பேசி கொள்கிறார்கள். இந்த பேச்சியெல்லாம் கலைஞர் காதில் எப்படியேறும்.

      இத்தகைய உருப்படி இல்லாத திட்டங்கள், கொள்கைகள் போன்றவற்றை கூட மன்னித்து விடலாம். .ஜெயலலிதா வந்தாலும் சரி வேறு யாரு ஆட்சிக்கு வந்தாலும் சரி தமிழகத்தின் தலையெழுத்து இப்போதைக்கு இதுதான்.

    ஆனால் மன்னிக்க முடியாத, கூடாத ஒரு கொடும் செயலை கலைஞர் கடைபிடித்து வருகிறார். இத்தனை நாள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்து ஏரளமான பணத்தை சுரண்டி வைத்திருக்கிறோம். அந்த பணத்தில் கால் பங்கை செலவழித்தாலே ஒட்டுமொத்த தமிழக வாக்காளர்களையே விலைக்கு வாங்கி விடலாம் என்று செயல்படுகிறார். இதன் மூலம் ஜனநாயகம் என்பது செத்த சவமாகிவிடும். அதனால்தான் தமிழகத்தில் ஜனநாயகம் பிழைக்க சர்வ நிச்சயமாக தி.மு.க தோற்க வேண்டும்

Monday, November 8, 2010

Vijay comedies


நன்றி: http://adrasaka.blogspot.com

எந்திரன் படத்தில் விஜய் நடித்திருந்தால்....

கடவுள் படச்சதுலயே மொக்கையான ரெண்டே விஷயம் என்னனு தெரியுமா?

1.நீ    2  நான்   (கண்ணாடி முன் நின்று கொண்டு விஜய்)

Monday, October 18, 2010

1...2...3...4 [சவால் சிறுகதை]

1) டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

2) “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

3) “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
 
4) "திருந்தி வாழணும்னு நினைச்ச என்னை புரிஞ்சுக்கிட்டு, இன்ஸ்பெக்டரா இருந்தும் சிவா காதலிச்சார். நீ அதை சாதகமாக்கி, என் குடும்பத்தை அழிச்சுடுவேன்னு தினம் தினம் பயமுறுத்தி அவரோட டிபார்ட்மென்ட் ரகசியங்கள் - டைமண்ட் பேரு வெச்ச இந்த டாப் சீக்ரெட் பைல் கொண்டு வர சொன்னே!! எவ்வளவோ கஷ்டங்கள், அடிபட்டு  ஹாஸ்பிட்டல்ல இருந்தும் உனக்காக கொண்டு வந்திருக்கேன். ஆனா நீ என் குழந்தையை கொன்னுட்டே!!! என்னை நம்பி என் நெற்றியில் பொட்டு வெச்சவன், நெற்றி பொட்டுல துப்பாக்கி வெச்சு என்னை விசாரிக்கும்போது... கண்ணீர் மல்க இதை சொல்லும்போது... இதுக்கு மேலயும் நான்..." என்று காமினி சொல்லி முடிப்பதற்குள், முகம் வெளிறிய பரந்தாமன் அவளை கொல்ல நினைக்கும்பொழுதே, பின்னாலிருந்து சிவா அவனை வெறித்தனமாக சுட்டுக் கொன்றான்.
 

காமினி, சிவா, பரந்தாமன், டாக்டர் மற்றும் நான் [சவால் சிறுகதை]

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

 
"இப்போ எதுக்கு தேவையில்லாம இதை சொன்னே?"
 
"நான் என்ன பண்றது? பரிசல்காரன் வெப்சைட்ல  ஏதோ கதை போட்டி வெச்சிருக்காங்க. அதுல இது தான் முதல் வரியாம்; மூணு வரியும் முழுசா சொன்னா தான் பரிசு குடுப்பாங்களாம். அதான் கலந்துக்கலாமா வேண்டாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்."
 
"உனக்கெல்லாம் எதுக்கு இந்த வேலை?  உன் கதையே நாறிக்கிட்டு இருக்கு.. "

 
"கிருஷ்ணா எவ்வளவு பெரிய ஆளு... ரசிப்போர் விழி தேடின்னு... ஒரு போட்டோல எவ்ளோ அழகா.. ஒரு ட்ரம்மை திருப்பி போட்டு, யாருமே இல்லாத இடத்துல மீன் பிடிச்சிட்டு  போஸ் கொடுத்திருக்கார். சுஜாதாவுக்கு அப்புறம் அவரு இடத்துல நீந்திக்கிட்டே போய் உட்காரும் ஒரே திறமையுள்ளவர். அவருக்கு ரஜினிகாந்த், கமல் எல்லோரும்...."
 
"நீ ரூல்ஸ் முழுசா படிக்கலையா? நடுவர் கிருஷ்ணா கிடையாது."
 
"அடச்சே... இதை முதல்லயே சொல்ல வேண்டியது தானே.... அப்புறம் யாராம்?"
 
"ஆதி தெரியுமா?"
 
"கேள்விப்பட்டதே இல்லை. ஆனா, அவரும் சூப்பர் ஸ்டார் தான். அவரு ப்ளாக் எழுதறாரா, இல்லை வெப்சைட்டானு  தெரியாது. பட் அவரோட எழுத்தெல்லாம் படிச்சிருக்கேன்."
 
"கஷ்டம்."
 
"சரி,  ரொம்ப பேசறே.... நான் கதை எழுதியே ஜெயிக்க பார்க்கறேன். கதைல வேற என்ன வரி இருக்கு?"
 
“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

 
"யாரு இவங்கெல்லாம்? சிவா, காமினி... சிவா ஏன் காமினி நெற்றியில துப்பாக்கியை வைக்கணும்? வேற எங்கேயும் வைக்க கூடாதா?"
 
"அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனா, ஒண்ணு மட்டும் ஸ்யூர். காமினி ரொம்ப நல்லவ...."
 
"சரி, சிவாவை வில்லன் ஆக்கிட வேண்டியது தான்..."
 
"அம்பது கதையும் அப்படி தான் வந்திருக்கும். வேற எதாவது வித்தியாசமா யோசிச்சு எழுது."
 
"வேற எப்படி எழுதறது?"
 
"நல்லா யோசி!!!  நல்ல கதைக்கு புக்ஸ் அனுப்புவாங்க."
 
"நல்ல கதை... எப்படி எழுதறதுனு வேணும்னா இப்பவே புக் அனுப்ப சொல்லுங்க.. படிச்சிட்டு எழுதறேன்."
 
"ம்ச்... அதான் முதல்லயே சொன்னேன், இதெல்லாம் உனக்கு ஒத்து வராதுன்னு..."
 
"முடியாது. நான் ப்ரைஸ் வாங்கியே தீருவேன். இப்போ நம்ம பேசினதையே சிறுகதையா அனுப்பினா?"
 
"பைத்தியமா நீ? கதைனா ரெண்டு விஷயம் இருக்கணும்."
 
"என்னது?"
 
"ஒண்ணு.. ஒரு கருத்து சொல்லி முடிக்கணும்."
 
"தமிழ்நாட்டுல கருத்துக்கா பஞ்சம்? இதோ என் கருத்து... நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா எது வேணும்னாலும் செய்யலாம்."
 
"முட்டாள்!!! கருத்துக்கும், கதைக்கும் சம்பந்தம் இருக்கணும்."
 
"ஓஹோ, அப்படியா? பர்ஸ்ட் பிளான் பண்ணின மாதிரி நடுவரை கரெக்ட் பண்ணி, நான் ஜெயிக்க என்ன வேணும்னாலும் செய்வேன்னு ப்ரூவ் பண்ணப்போறேன். இப்போ வசனம் கரெக்டா இருக்கா?"
 
"ம்ச்... கருத்துக்கும், ஹீரோக்குமாவது தொடர்பு இருக்கா?"
 
"இருக்கே... நானு, எங்க அப்பா, அம்மா, தம்பி - நாலு பேருக்கும் நல்லது நடக்க நடுவரை ஐஸ் வைக்கப் போறேன்."
 
"டேய்.. இதை எப்படிடா கதைன்னு ஒத்துக்குவாங்க?"
 
"ஏன் முடியாது? பேசாம படிச்சிட்டு இருந்த என்னை, சிறுகதை வைக்கிறேன்னு ரெண்டு பேரு குழப்பி விட்டுட்டாங்க. ஒழுக்கமா கதை எழுதலாம்னா வித்தியாசமா இருக்கணும்னு நீ குழப்பி விட்டுட்டே!!! இதுல மூணு லைன் குடுத்து, அதுவும் வரிசை மாறாம வரணுமாமாம்!! நல்லவனா இருந்த என்னை இப்படி மாறி, மாறி பேசி என்னை மாத்திட்டீங்க. இது கதை இல்லியா?"
 
"இப்போ என்னங்கறே?"
 
"நீ ரெண்டாவது விஷயம் என்னான்னு சொல்லு.."
 
"கதைனா கடைசியில நல்லவன் ஜெயிக்கிறமாதிரி காட்டணும். இதுக்கு என்ன செய்வே? "
 
"இந்த கதைய செலக்ட் செஞ்சா அவங்க நல்லவங்க.."
 
"இல்லைனா?'
 
"கதைனா இப்படி தான் இருக்கணும்னு ரூல்ஸ் வெச்சதை மாத்தின முதல் ஆளா நான் இருப்பேன்கிற பெருமை போதும்."
 
"நீ திருந்தவே மாட்டே!!! நான் கெளம்பறேன்."
 
"சரி... போறதுக்கு முன்னாடி அந்த லாஸ்ட் வரியும் சொல்லிட்டு  போ!!!"
 
“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
 

Friday, September 10, 2010

சிரிப்பு (வரணும்)....


* சென்னையில இருந்து லண்டனுக்கு எவ்வளோ தூரம்?
** ரொம்ப தூரம்........

-------------------------------------------------------------------------------- 

* முட்டை போடாத பறவை எது..?
** ஆண் பறவை.

-------------------------------------------------------------------------------- 

* பில் கேட்ஸ் மனைவி பெயர் என்ன..?
** Mrs.பில் கேட்ஸ் 

-------------------------------------------------------------------------------- 

அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி Accident ஆச்சு..?
இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?
அவர் : தெரியுது...
இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!

--------------------------------------------------------------------------------

தொண்டர் 1 : நம்ம தலைவர் தன்னோட எல்லா சொத்தையும் கட்சிக்கே எழுதி வெச்சிட்டாரு..!
தொண்டர் 2 : சந்தோஷமான விஷயம் தானே..!
தொண்டர் 1 : அட போப்பா.., கட்சியை அவரோட மகனுக்கு எழுதி வெச்சிட்டாரு..!!

--------------------------------------------------------------------------------

நிருபர் : நடிக்க வரலைன்னா என்ன பண்ணியிருப்பீங்க..?
நடிகை : Doctor ஆயிருப்பேன்..
நிருபர் : அதான் நடிக்கவே வரலைல்ல., போயி Doctor ஆக வேண்டியது தானே..?!

--------------------------------------------------------------------------------

நண்பன் 1 : காலையில உங்க வீட்டுக்கு வந்து இருந்தேன்.., உங்க அப்பாகிட்ட நீ எங்கேன்னு கேட்டதுக்கு., " அந்த மாடு எங்கயாச்சும் ஊர் மேய
போயிருக்கும்னு " சொன்னார்டா..!
நண்பன் 2 : என்கிட்ட " அந்த எருமை வந்துட்டு போச்சுன்னு" சொன்னாரு.., அது உன்னைத் தானா..!!

--------------------------------------------------------------------------------

" Hello...! "
" Hello.. உங்க ஆபிசுல A.C Work பண்ணுதா.? "
" பண்ணுதே.. ! "
" Computer Work பண்ணுதா.? "
" அதுவும் Work பண்ணுதே..! "
" அப்ப நீங்க மட்டும் ஏன் சார் வெட்டியா Phone பேசிட்டு இருக்கீங்க..? நீங்களும் போயி Work பண்ணுங்க...! "

--------------------------------------------------------------------------------

சிலர் கேட்கிறாங்க... "நீங்க எழுதி இருக்கிறதை படிச்சா சிரிப்பே வரலைன்னு..! "
என்ன பண்ண..?
ஆங்.. idea...!
வேணும்ன்னா இன்னொரு தடவை சிரிச்சிட்டே படிச்சி பாருங்களேன்..!

Thursday, September 9, 2010

தர்மபுரி

நன்றி: http://www.blog.sanjaigandhi.com/


கிருஷ்ணகிரி அருகில் உள்ள பையூர் விவசாய ஆராய்ச்சி நிலையத்துக்கு கோவையில் இருந்து இரண்டு பேருந்துகள் கிளம்புகின்றன. ஒன்றின் மாணவர்களும் இன்னொன்றில் மாணவிகளும். அவர்கள் அனைவரும் கோவை விவசாயப் பல்கலைகழக மாணவர்கள். கல்விச் சுற்றுலாவுக்கான பயணம். ஆடிப்பாடி அரட்டையடித்து சந்தோஷமாக சில நூறு கிலோமீட்டர்களைக் கடந்து தருமபுரி நகரம் வந்தடைகிறார்கள். அங்கிருந்து மாணவர்களின் பேருந்து முன்னதாகவும் மாணவிகள் பேருந்து அதைத் தொடர்ந்தும் பையூருக்கு பயணம் தொடர்கிறது.  அடுத்த நாள் அவர்கள் பல புதிய ஆராய்ச்சிகளை காணப் போகிறார்கள். அது அவர்களின் வாழ்க்கையை மாற்றியும் அமைக்கலாம். இன்னும் தருமபுரி ஆட்சியர் அலுவலகம் கூட வந்து சேர்ந்திருக்கவில்லை. நகரின் மையப்பகுதி..

 அவர்கள் மட்டுமின்றி யாருமே எதிர்பாராத வகையில் ஒரு கொலைவெறி கும்பல் அவர்களை மறிக்கிறது. பேருந்தின் அனைத்து பக்கமும் கற்கள் வீசப் படுகின்றன. கல்வீச்சில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மாணவிகள் ஜன்னல் திரைகளை மூடுகிறார்கள். அது தான் அவர்களுக்கு பெரும் ஆபத்து என்பது அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை. பேருந்தை மறிந்த அந்த மிருகங்கள் பேருந்தின் மீது பெட்ரோலை ஊற்றுகின்றன. சில மிருகங்கள் தீயை கொளுத்துகிறார்கள். பேருந்து கொளுந்துவிட்டு எரிகிறது. உள்ளே மாணவிகள் அலறல். ஜன்னல் வழியே தப்பிக்கலாம் என்றால் தொடர்ந்த கல்வீச்சு. பிணம் திண்ணி கழுகுகளின் ஆட்டம் அடங்கவேயில்லை. வெகு விரைவில் பேருந்து முழுதும் தீ பரவிவிட்டது. யாராலும் வெளியேற முடியவிலை.

எதேச்சையாய் அதை கவனித்த மாணவர்கள் தங்கள் பேருந்தை நிறுத்திவிட்டு ஓடிவருகிறார்கள். இந்த பிணம் திண்ணி நாய்கள் தப்பி ஓடுகின்றன. மாணவர்கள் எரியும் பேருந்தின் கண்ணாடிகளை உடைக்கிறார்கள். அதன் வழியே மாணவிகளை வெளியே இழுத்துப் போடுகிறார்கள். அனைவருக்கும் தீக்காயங்கள். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் மாணவிகள் ஒருபுறம். தீக்காயங்களுடன் வெளியேறி, உள்ளே இருக்கும் உங்கள் உயிர்த்தோழிகளை மாணவர்களுடன் சேர்ந்து மீட்கப் போராடுவது இன்னொருபுறம். ஒருவழியாய் அனைவரும் வெளியேறிவிட்டார்கள் என மூச்சுவிட்டுக் கொண்டிருந்த போது திடீர் பரபரப்பு மாணவிகளிடம்.. எங்கே ஹேமலதா? எங்கே காயத்ரி? எங்கே கோகிலவாணி?

வகுப்புக்குப் போகாமல் மரங்களடியில் அமர்ந்து ஜாலியாய் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறோம். டேய் மச்சான், பாரதிபுரத்த்துகிட்ட யாரோ காலேஜ் பசங்க பஸ்ஸை கொளுத்திட்டாங்களாம்டா.. என்று யாரோ ஒரு மாச்சான் கத்தினான். மற்றவர்களுக்கும் தகவல் சொல்ல சொல்லிவிட்டு அங்கிருந்த சிலர் மட்டும் உடனே ஓடத்துவங்குகிறோம். அப்போது எல்லோருமே பேருந்துகளில் தான் கல்லூரி வருவோம். யாரிடமும் வாகனங்கள் இல்லை. அல்லது இருப்பவரைத் தேடிக் கொண்டிருக்க மன்மோ நேரமோ இல்லை. கல்லூரியிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் சற்று கூடுதலான தூரத்தை அடைய ஓடிக்கொண்டிருக்கிறோம்.

ஒரு பேருந்து முற்றிலும் எரிந்து எலும்புக் கூடாய் இருந்தது. எங்கும் மரண ஓலம். முகத்தில் உயிர் பயம். தேவைப் பட்ட உதவிகளை செய்துவிட்டு சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்த போது என் நண்பன் ஒருவனைப் பார்த்தேன். என் பள்ளித் தோழன். டேய் , நீ என்னடா பண்ற இங்க? என்று கேட்டது தான் தாமதம். மச்சான், அரைமணி நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் எங்கக்கூட இருந்து என் ஃப்ரண்ட்ஸ் இப்போ எங்கள விட்டுப் போய்ட்டாங்கடா.. பயணம் செய்த மாணவர்களில் அவனும் ஒருவன். அங்கிருந்தவர்கள் முகத்தில் உயிர் பயத்தை மட்டும் பார்த்த என் நண்பர்களுக்கு உயிர்பலி அப்போது தான் புரிந்தது. அவன் பார்வை சென்ற திசை நோக்கி பீதியுடன் போய் பார்த்தேன். பேருந்தின் பின் நுழைவாயில். கதவு சாத்தி இருந்தது. மெதுவாக எட்டிப் பார்த்தேன். அது என் வாழ்வில் மறக்கவே முடியாத காட்சியாக இருக்கும் என அந்த நொடி வரை தெரியவில்லை. மூன்று மாணவிகள் ஒருவர் மீது ஒருவர் தீக்கு இரையாகிக் கிடந்தார்கள்.

தருமபுரி நகரத்தில் அதிமுகவில் பல அணிகள் இருந்தாலும் பெரும் அணிகள் இரண்டு உண்டு. SR வெற்றிவேல் (இவர் தந்தையை ரவுடி ரங்கன் என்பார்கள் , சமீபத்தில் நடந்த? உட்கட்சித் தேர்தலில் எதிரணி வேட்பாளரை தேர்தல் அலுவலகம் முன்பே வெட்டிக் கொன்றதாக கைது செய்யப் பட்டார் வெற்றிவேல் .) தலைமையில் ஒரு அணி. மிஸ்டர் எக்ஸ்( வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.. எனவே பெயர் தேவையில்லை )  தலைமையில் மற்றொரு அணி. வெற்றிவேல் வளர்ச்சி ஏறுமுகமாக இருந்தது. மிஸ்டர் எக்ஸ் ஒதுக்கிவைக்கப் பட்டிருந்தார். மீண்டும் தன் விசுவாசத்தைக் காட்ட சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருந்தவருக்கு ஒரு வாய்ப்பு வருகிறது. ப்ளசண்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வருகிறது. பழம் நழுவி பாலில் விழுந்தது போல் துள்ளிக்குதித்த மிஸ்டர் எக்ஸ் தன் அல்லக்கைகளை ஏவி விடுகிறார். அந்தக் கூலிப்படை தன் வெறியாட்டங்களை நிகழ்த்த சிக்கியவர்கள் தான் இந்த அப்பாவி மாணவர்கள்.

குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்கிறார்கள். செஷன்ஸ் நீதிமன்றத்தில் சிலருக்கு ஆயுள் தண்டனையும் சிலருக்கு மரண தண்டனையும் விதிக்கப் படுகிறது. வழக்கு பேல் முறையீட்டுக்காக சென்னை உயர்நீதிமன்றம் செல்கிறது. மூன்று பேரின் மரண தண்டனைகள் உறுதி செய்யப் படுகிறது. மற்றவர்களின் தண்டனைகளில் சில மாற்றங்கள். பின்னர் வழக்கு உச்ச நீதி மன்றத்துக்கு செல்கிறது. இப்போது உச்ச நீதி மன்றமும் இவர்களுக்கு மரண தண்டனையை உறுதிப் படுத்துகிறது.

இந்த மிருகங்களுக்கான இந்த தண்டனையை மகிழ்ச்சியுடன் வரவேற்க்கிறேன். அன்று இவர்கள் எங்கள் கையில் கிடைத்திருந்தால் நாங்களே கொன்றிருந்தாலும் கொன்றிருப்போம். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகாவது நல்ல தீர்ப்பு வந்ததே. ஆனால் சாக வேண்டியவர்கள் இந்த மூவர் மட்டுமே இல்லை. இன்னும் சில பிணந்திண்ணிகள் தப்பிவிட்டன.

வழக்கம் போல் மனித உரிமை ஆர்வலர்கள் கூவ ஆரம்பித்து விட்டார்கள். எனக்குத் தெரிந்தவரையில் இவர்கள் பேர் தான் மனித உரிமை ஆர்வலர்கள். உண்மையில் மிருக ஆதரவு விளம்பரப் பிரியர்கள். மரண தண்டனையை எதிர்க்கிறார்களாம். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், சட்டம் தொடர்பானது இல்லை. உயிரைப் பறிக்க அரசாங்கத்துக்கு உரிமை இல்லையாம். அதுவும் கொலை தானாம். நல்லா சொல்றாங்க டீட்டெயிலு. சில நண்பர்கள் எழுதி இருப்பது போல், தண்டனை என்பது குற்றவாளியை திருந்த மட்டுமில்லை. அது போன்றக் குற்றம் மீண்டும் நிகழாமல் இருக்கவும் தான். மனிதனுக்கு இருக்கும் உச்சகட்ட பயமே உயிர் பயம் தான். உயிரோடு இருக்கத்தான் எல்லாம் செய்கிறார்கள். தன் செயலால் அந்த உயிரே போய்விடும் என்று தெரிந்தால் தயங்குவார்கள் அல்லவா?. ஆகவே சில குற்றங்களுக்கு மரண தண்டனை அவசியம். 

இந்த சம்பவத்தில் இறந்த 3 பெண்கள் மட்டும் தான் அனைவருக்கும் தெரிகிறார்கள். ஒருவேளை மற்றவர்களையும் காப்பாற்ற முடியாமல் போயிருந்தால்?. இந்த கூலிப்படையின் நோக்கம் இந்த 3 பெண்களை மட்டும் கொல்வதல்ல. ஒட்டு மொத்த மாணவிகளையும் கொல்வது தான். எனவே இதில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் மரண தண்டனை அளித்திருக்க வேண்டும். 

இல்ல இல்ல.. என்ன காரணம் சொன்னாலும் மரண தண்டனை தவறு தான் என சொல்பவர்களுக்கு:  

போங்கய்யா நீங்களும் உங்க மசுரப் புடுங்குற மனித உரிமையும்..

Wednesday, August 25, 2010

கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

நன்றி: http://truetamilans.blogspot.com/

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் குடும்பத்தில் இருந்து 2 ஆயிரத்து 632 பேர் வந்திருந்திருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் கோல்டன் பாஸ் கொடுத்திருக்கிறார்கள்.

முதல்வர் வீட்டுச் சம்பந்திகள், அவர்களது வீட்டு உறவினர்கள், பேரன், பேத்திகள் என்று அத்தனை பேருக்கும் 90 புரோட்டோகால் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதாவது அவர்களைத் தங்குமிடத்தில் இருந்து விழா இடத்துக்கு அழைத்து வரும் வேலையைச் செய்தது இந்த கடமை தவறாத தமிழக அரசு அதிகாரிகள்தானாம்..

இது தவிர, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கார், ஒரு டிரைவர்ன்னு சூப்பரா ஏற்பாடு செய்திருக்கிறார்கள்..

இதெல்லாம் யார் வீட்டுக் காசு..?

தி.மு.க. மாநாட்டு மேடைகளில் அவர்களது விழாக்களில் முதல்வர் கருணாநிதியின் குடும்பம் முன் வரிசையை மொத்தமாக ஆக்கிரமித்துக் கொள்ளும். தமிழுக்காக ஒரு மாநாடு நடத்தப்படும்போதும் அந்த நிலைதான் தொடர வேண்டுமா..?

ஊர்வலத்தைப் பார்ப்பதற்கு வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்கள், உள்ளூர்ப் புலவர்கள் பலரும் ஒழுங்கான இடமில்லாமல் திணறித் தவிக்க.. கருணாநிதி குடும்பத்தின் நான்கு தலைமுறை வாரிசுகளும் ஒரு முழு மேடையை கபளீகரம் செய்து கொண்டார்கள்.

மாநாட்டுப் பொது மேடையின் முன் வரிசையில் இருந்த மொத்த நாற்காலிகளும் அவர்களுக்குத்தான்.. அவர்கள் திடீரென அரங்குக்குள் நுழையும்போது 15 வரிசை ஆட்களும் எழுந்து நிற்கிறார்கள். அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் பேசிக் கொண்டிருக்கும்போது செல்வி, துர்கா ஸ்டாலின், காந்தி அழகிரி வருகிறார்கள். முன் வரிசை ஆட்கள் எழுந்து நிற்கிறார்கள். ஹார்ட் இதன் அர்த்தம் புரியாமல் விழிக்கிறார்.

தொடக்க விழாவில் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதால் ஊர்வலம் பார்க்கும் மேடையை அழகிரியும், தயாநிதி மாறனும் பிடித்துக் கொண்டார்கள். ஆய்வரங்கத் தொடக்க விழா மேடையில் கனிமொழி மகாராணி போல் வலம் வந்தார். அழகிரி மகள் கயல்விழி கவியரங்கில் இருந்தார். செல்வி மகள் எழிலரசி வீணை வாசித்தார். கண்காட்சியை அழகிரி திறந்து வைத்தார். இணையதளக் கண்காட்சியைத் திறப்பது தயாநிதி மாறன். இறுதி நாள் மேடையில் ஸ்டாலினுக்கு நாற்காலி இருப்பதை உணர்ந்த அழகிரியும் தானே மேடையேறி ஓர் இடத்தைப் பிடித்தார்.

கிளம்பிற்றுகாண் ஜால்ரா கூட்டம்..

அதே கவிஞர்கள்.. அதே கூட்டம் சூழ்ந்திருக்க நடுநாயகமாக வீற்றிருக்கிறார் முதல்வர்.. யாரங்கே.. தொடங்கட்டும் என்று ஆரம்பமாகிறது கவியரங்கம்..

கிளம்பிற்றுக்கான் தமிழ்ச் சிங்கக் கூட்டம் என்று வைரமுத்துவும், தமிழுக்கும் அமுதென்று பேர் என்று வாலியும் ஆளுக்கொரு சோப்பு கம்பெனியுடன் வந்தார்கள்.

செம்மொழித் தங்கமே எங்கள் செல்வச் சிங்கமே.. உன்னைக் கும்பிட்டால் ஊரையே கும்பிட்ட மாதிரி” என்று ஆரம்பித்து பாப்பநாயக்கன்பாளையம் டீக்கடை ஒன்றில் செம்மொழி மாநாடு நோக்கி நிற்கும் ஒரு மூதாட்டியிடம் தான் பேசும் பாவனையில் முதல்வர் மேல் மும்மாரி பொழிந்தார் வைரமுத்து.

கலைஞரின் கபாலக் களஞ்சியத்தில் ஆண் எண்ணங்களைவிட ஈரப் பெண் எண்ணங்களே அதிகம். இல்லாவிட்டால், கோபாலபுரம் வீட்டை கொடையாகத் தர முடியுமா..? அந்த ஒளவையார் காலத்தில் இவர் இருந்திருந்தால் அதியமான் ஏமாந்திருப்பான்..” என்றெல்லாம் கவிதை மழை பொழிந்தது ஈரோடு தமிழன்பன்.

பாடலாசிரியர் விவேகா, “தலைவா நீ சாகா விளக்கு.. விதி விலக்கு.. அகல் விளக்கு.. அகலா விளக்கு.. சென்னைக்குத் தெற்கே உள்ள திருக்குவளையில்தான் தமிழுக்குக் கிழக்கே பிறந்தது” என்று கண்டுபிடித்துச் சொன்னார்.

விடுவாரா நா.முத்துக்குமார்? “சோற்றை விட்டுவிட்டு சூரியனைச் சாப்பிட்டாய்.. திரையுலகில் பலர் ஜெயித்திருக்கிறார்கள். ஆனால் கலைஞர் திரை உலகையே ஜெயித்திருக்கிறார். கலைஞர் ஒரு மலைக்கோட்டை” என்று வாசித்தார்.

கயல்விழிக்கான அறிமுகமே அபாரம். “தாத்தா தலையாட்ட.. பாட்டி தாலாட்ட.. அப்பா பாராட்ட.. சித்தப்பா சீராட்ட.. பாட வா பெண்ணே.. உன் தாத்தாவிடம் நீ கேட்ட தமிழ்ப் பாட்டை..” என்று அழைத்தார் வைரமுத்து.

பாட்டு என்று அழைத்ததால் உண்மையில் பாடியேவிட்டார் கவிதாயினி. “பள்ளம் மேடாக வேண்டும். புரையோடிப் போன லஞ்சம் போக வேண்டும்” என்று சொன்னதுதான் யாருக்கு என்று புரியவில்லை..

இதையெல்லாம் கேள்விப்பட்ட வாலி தலைமையிலான அணி 16 அடி பாய்ந்தது. “ஒரு குவளை தமிழ்த் தாய்க்கே பால் ஊட்டியது அக்குவளை திருக்குவளை..” என்று சொன்னவர் மேத்தா. “காற்றே கலைஞரின் புகழ்ப் பாடித் திரி..” என்று இயற்கைக்கு உத்தரவிட்டார் வாலி. “கலைஞரை முத்தமிழ் என்று சொன்னால் நான் முரண்படுவேன். அவர் மொத்தத் தமிழன். வீடு வரை உறவு.. வீதி வரை மனைவி.. காடு வரை பிள்ளை.. கடைசிவரை கலைஞர்..” என்றெல்லாம் புகழ் பாடிப் பொழிந்தவர் இறுதியில் “முத்துக்குமார் தீக்குளித்து வளர்த்த தமிழ்” என்று முடித்தார் பழநிபாரதி.

“82 வயது உடல் மறைத்த இளைஞனே.. கலைஞரில் இருக்கிறார் கடவுள்.. 108 வடிவில் காப்பது கலைஞர்தானே..?” என்று தன் பணியைச் செவ்வனே முடித்தார் பா.விஜய்.

ஹைலைட்டான விஷயம்..

செம்மொழி மாநாட்டு அழைப்பிதழ்களை கலைஞர் குடும்பத்து குல தெய்வமான திருக்குவளை பரமேஸ்வரி கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டிருக்கிறது. அந்த அழைப்பிதழ்களை கொண்டு வந்து கொடுத்த ஆறு பூசாரிகளுக்கும் தனது கையாலே, தலா மூன்றாயிரம் ரூபாய் ரொக்கத்தையும், பட்டு வேஷ்டியையும் கொடுத்திருக்கிறார் கருணாநிதி. இதைச் சொல்லிச் சொல்லி பூரித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த பூசாரிகள்.

ம்ஹும்.. பகுத்தறிவு வேஷம் போடும் இவரைப் போன்ற வேடதாரிகள் தமிழினத்தின் தலைவராம்..

மொழிக்காக உயிரையே கொடுப்பேன் என்று வெற்றுக் கூச்சல் போட்டு மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து 450 கோடியைத் திருடி தன்னைத் தானே வாழ்த்திக் கொண்ட அற்பபுத்தியுடைய இந்தத் திருடர்கள் கூட்டம்தான் தமிழகத்தை வாழ வைக்க வந்த தெய்வங்களாம்..

சகித்துக் கொள்ள முடியவில்லை..