டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
"இப்போ எதுக்கு தேவையில்லாம இதை சொன்னே?"
"நான் என்ன பண்றது? பரிசல்காரன் வெப்சைட்ல ஏதோ கதை போட்டி வெச்சிருக்காங்க. அதுல இது தான் முதல் வரியாம்; மூணு வரியும் முழுசா சொன்னா தான் பரிசு குடுப்பாங்களாம். அதான் கலந்துக்கலாமா வேண்டாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்."
"உனக்கெல்லாம் எதுக்கு இந்த வேலை? உன் கதையே நாறிக்கிட்டு இருக்கு.. "
"கிருஷ்ணா எவ்வளவு பெரிய ஆளு... ரசிப்போர் விழி தேடின்னு... ஒரு போட்டோல எவ்ளோ அழகா.. ஒரு ட்ரம்மை திருப்பி போட்டு, யாருமே இல்லாத இடத்துல மீன் பிடிச்சிட்டு போஸ் கொடுத்திருக்கார். சுஜாதாவுக்கு அப்புறம் அவரு இடத்துல நீந்திக்கிட்டே போய் உட்காரும் ஒரே திறமையுள்ளவர். அவருக்கு ரஜினிகாந்த், கமல் எல்லோரும்...."
"நீ ரூல்ஸ் முழுசா படிக்கலையா? நடுவர் கிருஷ்ணா கிடையாது."
"அடச்சே... இதை முதல்லயே சொல்ல வேண்டியது தானே.... அப்புறம் யாராம்?"
"ஆதி தெரியுமா?"
"கேள்விப்பட்டதே இல்லை. ஆனா, அவரும் சூப்பர் ஸ்டார் தான். அவரு ப்ளாக் எழுதறாரா, இல்லை வெப்சைட்டானு தெரியாது. பட் அவரோட எழுத்தெல்லாம் படிச்சிருக்கேன்."
"கஷ்டம்."
"சரி, ரொம்ப பேசறே.... நான் கதை எழுதியே ஜெயிக்க பார்க்கறேன். கதைல வேற என்ன வரி இருக்கு?"
“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
"யாரு இவங்கெல்லாம்? சிவா, காமினி... சிவா ஏன் காமினி நெற்றியில துப்பாக்கியை வைக்கணும்? வேற எங்கேயும் வைக்க கூடாதா?"
"அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனா, ஒண்ணு மட்டும் ஸ்யூர். காமினி ரொம்ப நல்லவ...."
"சரி, சிவாவை வில்லன் ஆக்கிட வேண்டியது தான்..."
"அம்பது கதையும் அப்படி தான் வந்திருக்கும். வேற எதாவது வித்தியாசமா யோசிச்சு எழுது."
"வேற எப்படி எழுதறது?"
"நல்லா யோசி!!! நல்ல கதைக்கு புக்ஸ் அனுப்புவாங்க."
"நல்ல கதை... எப்படி எழுதறதுனு வேணும்னா இப்பவே புக் அனுப்ப சொல்லுங்க.. படிச்சிட்டு எழுதறேன்."
"ம்ச்... அதான் முதல்லயே சொன்னேன், இதெல்லாம் உனக்கு ஒத்து வராதுன்னு..."
"முடியாது. நான் ப்ரைஸ் வாங்கியே தீருவேன். இப்போ நம்ம பேசினதையே சிறுகதையா அனுப்பினா?"
"பைத்தியமா நீ? கதைனா ரெண்டு விஷயம் இருக்கணும்."
"என்னது?"
"ஒண்ணு.. ஒரு கருத்து சொல்லி முடிக்கணும்."
"தமிழ்நாட்டுல கருத்துக்கா பஞ்சம்? இதோ என் கருத்து... நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா எது வேணும்னாலும் செய்யலாம்."
"முட்டாள்!!! கருத்துக்கும், கதைக்கும் சம்பந்தம் இருக்கணும்."
"ஓஹோ, அப்படியா? பர்ஸ்ட் பிளான் பண்ணின மாதிரி நடுவரை கரெக்ட் பண்ணி, நான் ஜெயிக்க என்ன வேணும்னாலும் செய்வேன்னு ப்ரூவ் பண்ணப்போறேன். இப்போ வசனம் கரெக்டா இருக்கா?"
"ம்ச்... கருத்துக்கும், ஹீரோக்குமாவது தொடர்பு இருக்கா?"
"இருக்கே... நானு, எங்க அப்பா, அம்மா, தம்பி - நாலு பேருக்கும் நல்லது நடக்க நடுவரை ஐஸ் வைக்கப் போறேன்."
"டேய்.. இதை எப்படிடா கதைன்னு ஒத்துக்குவாங்க?"
"ஏன் முடியாது? பேசாம படிச்சிட்டு இருந்த என்னை, சிறுகதை வைக்கிறேன்னு ரெண்டு பேரு குழப்பி விட்டுட்டாங்க. ஒழுக்கமா கதை எழுதலாம்னா வித்தியாசமா இருக்கணும்னு நீ குழப்பி விட்டுட்டே!!! இதுல மூணு லைன் குடுத்து, அதுவும் வரிசை மாறாம வரணுமாமாம்!! நல்லவனா இருந்த என்னை இப்படி மாறி, மாறி பேசி என்னை மாத்திட்டீங்க. இது கதை இல்லியா?"
"இப்போ என்னங்கறே?"
"நீ ரெண்டாவது விஷயம் என்னான்னு சொல்லு.."
"கதைனா கடைசியில நல்லவன் ஜெயிக்கிறமாதிரி காட்டணும். இதுக்கு என்ன செய்வே? "
"இந்த கதைய செலக்ட் செஞ்சா அவங்க நல்லவங்க.."
"இல்லைனா?'
"கதைனா இப்படி தான் இருக்கணும்னு ரூல்ஸ் வெச்சதை மாத்தின முதல் ஆளா நான் இருப்பேன்கிற பெருமை போதும்."
"நீ திருந்தவே மாட்டே!!! நான் கெளம்பறேன்."
"சரி... போறதுக்கு முன்னாடி அந்த லாஸ்ட் வரியும் சொல்லிட்டு போ!!!"
“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
நல்லா இருக்கு வெற்றி பெற வாழ்த்துகள்
ReplyDelete